முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு காவல்துறைக்கு டிடிவி தினகரன் கேள்வி

எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினால் ஒமிக்ரான் பரவும் என தடைபோட்ட காவல்துறை, கோவை கூட்டத்திற்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி, நகரட்சி, பேரூராட்சி நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக இளைஞர் அணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். கொரோனா, ஒமிக்ரான் உள்ளிட்டவை பரவி வரும்  நிலையில், அதிக நபர்களை கொண்டு கூட்டம் நடத்தியது தொற்று பரவலை அதிகரிக்கும் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமிக்ரான் பரவுமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அந்த பதிவில் ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என விமர்சித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பேனர் கிழிந்ததால் மண்டப உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்

Saravana Kumar

உட்கட்சித் தேர்தலை குழப்ப முயற்சி; கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்

Ezhilarasan

மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

Ezhilarasan