பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு நடிகர் #KamalHassan இரங்கல்!

கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள…

கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79) ) உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள திரையுலகில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் கமல் நடித்த ‘சத்யா’ படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கமலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மா, எர்ணாகுளம் லிசி மருத்துவமனையில் நேற்று முந்தினம் மாலை 5:30 மணியளவில் காலமானார். இந்நிலையில், கவியூர் பொன்னம்மா மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில், ‘எல்லா நடிகர்களுக்கும் அம்மா’ என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.

தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது. ‘அம்மா’ கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.