18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அதன் பணியாளர்களில் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.  ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையே உருவாக்கியது என்று கூறலாம். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கேஷ்ஆன்…

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அதன் பணியாளர்களில் 18,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. 

ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையே உருவாக்கியது என்று கூறலாம். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கேஷ்ஆன் டெலிவரி முறையை அமேசான் தான் அறிமுகப்படுத்தியது.

வணிகஇ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை மிகப்பெரிய பணிநீக்க அறிப்பை அறிவித்து உள்ளன. சுமார் 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அமேசான் தெரிவித்துள்ளது.

சியாட்டலை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம்ஆகும். உலகம் முழுவதிலும் இந்நிறுவனத்தில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் பணிநீக்கம் செய்யப்படுவது ஒரு பகுதி தான். இதில்அமேசான் பிரஷ் மற்றும் அமேசான் கோ ஆகியவை அடங்கும்.இது குறித்து அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறுகையில், கடந்த காலங்களில் அமேசான் நிச்சயமற்ற மற்றும் கடினமான பொருளாதார நிலையை எதிர்கொண்டது. இந்த மாற்றங்கள் வலுவான செலவுக் கட்டமைப்புடன் எங்களது நீண்ட கால வாய்ப்புகளைத் தொடர உதவும் என கூறினார்.

அமேசான் வேலை இழப்பு கட்டணம், இடைநிலை சுகாதார காப்பீட்டு நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவற்றையும் வழங்குகிறது. சேல்ஸ்போர்ஸ், சுமார் 8,000 ஊழியர்களை அதாவது அதன் பணியாளர்களில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாகக் கூறி உள்ளது.

சேல்ஸ்போர்ஸின் உயர்மட்டத் தரவரிசையில் ஏற்பட்ட ஒரு நிச்சயமன்ற தன்மை காரணமாக பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் 23 ஆண்டுகால வரலாற்றில் இது மிகப் பெரிய பணி நீக்கமாகும். வேலையை இழக்கும் சேல்ஸ்போர்ஸ் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஐந்து மாத ஊதியம், உடல்நலக் காப்பீடு, தொழில் வளங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.