முக்கியச் செய்திகள் தமிழகம்

நான் நலமாக உள்ளேன்- விஜயகாந்த் ட்வீட்

சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ள நடிகர் விஜயகாந்த் நான் நலமாக உள்ளேன் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த்துக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த்தால் சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 30ம் தேதி சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் அவரது உதவியாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என பதிவிட்டுள்ளார்.

 

 

Advertisement:
SHARE

Related posts

2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!

Jayapriya

நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

Gayathri Venkatesan

செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதித்திருந்த தடை நீக்கம்: கடும் எதிர்ப்பால் நடவடிக்கை!

Halley karthi