சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தனது உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதையடுத்து ‘சிட்டாடல்‘ என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். மேலும் ‘சென்னை ஸ்டோரி‘ என்ற ஆங்கில படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா காலை உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், நாயுடன் விளையாடும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு சிரித்த முகத்துடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.







