மாசில்லாத கட்டுமானங்களை உருவாக்க முனையும் மாற்றுக்குழு!

சராசரியாக இந்தியா 150 மில்லியன் டன் அளவில் கட்டுமான கழிவுகளை வெளியேற்றுகிறது. இது வெளியிடப்பட்ட தகவல். ஆனால், இந்த அளவு உண்மையாக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், மாசு இல்லாத, சூழலியலுக்கு…

சராசரியாக இந்தியா 150 மில்லியன் டன் அளவில் கட்டுமான கழிவுகளை வெளியேற்றுகிறது. இது வெளியிடப்பட்ட தகவல். ஆனால், இந்த அளவு உண்மையாக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சூழலில், மாசு இல்லாத, சூழலியலுக்கு பாதிப்பில்லாத கட்டுமானங்களை உருவாக்குவதில் Biome Environmental Solutions முக்கியப் பங்காற்றி வருகிறது.

கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் புவியிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. ஆனால், அது மீண்டும் கழிவாக மாற்றப்பட்டு புவிலேயே கொட்டப்படுகிறது. இந்த கழிவுகளிலிருந்து மனித சமூகத்தை காப்பாற்றும் முயற்சியாக இந்த கட்டுமான நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கட்டுமான கழிவுகளிலிருந்து பெறப்படும் மண்ணை வைத்து உடன் சிமென்ட் சேர்த்து புதிய முறையில் செங்களை உருவாக்கி அதனை உட்புற கட்டமைப்புக்கு இந்த குழு பயன்படுத்துகிறது. மேலும், கழிவு நீரை இயற்கை முறையில் சுத்திகரித்து அதை கட்டுமானப்பணிகளுக்காக மீண்டும் பயன்படுத்தி மாசுகளை குறைத்து வருகிறது. இதன் மூலம் மாசற்ற கட்டுமானங்களை முன்மாதிரியாக உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.