திமுகவிடம் அதிக உரிமை உள்ளதால் பேச்சுவார்த்தை தாமதம் ஆகிறது: ஈஸ்வரன்

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி இடையே முதல்…

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி இடையே முதல் மற்றும் 2ஆம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. திமுக பேச்சுவார்த்தைக் குழுவினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இன்று அல்லது நாளை மீண்டும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுகவுடன் நீண்ட கால உறவு உள்ளதால் உரிமையும் அதிகமாக உள்ளது. உரிமை உள்ளதால் பேச்சுவார்த்தை தாமதம் ஆகிறது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.