முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏப்ரல் 14ம் தேதி வாட்சு பில்லோட ஊழல் பட்டியலையும் வாங்கி கொள்ளுங்கள் – அண்ணாமலை

ஏப்ரல் 14ம் தேதி வாட்சு பில்லோட  சேர்த்து ஊழல் பட்டியலையும் வாங்கி கொள்ளுங்கள் என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”  கூட்டனி குறித்து அமித்ஷா  சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. ஆனால் கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா  மற்றும் நட்டா  போன்றோர் தான். 2024, 2026, 2030 போன்ற தேர்தல்கள் எப்படி இருக்கும் என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறேன்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் கிளீன் பாலிடிக்ஸை பார்ப்பீர்கள் . தேசியத் தலைவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். அதிமுக கூட்டணியில் உள்ள கொள்கை, எங்கு நிற்க வேண்டும், எத்தனை சீட்டுகள் என்பதில் தான் வாதம் செல்கிறது. எதுவும் இங்கே கல்லில் எழுதப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறேன் அவ்வளவுதான்.

இன்னும் ஒன்பது மாதம் தேர்தலுக்கு இருக்கும்போது பொறுத்திருக்க வேண்டும். கூட்டணி உறுதியானது என இப்போது யாரும் சொல்ல மாட்டார்கள். கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் பயணிக்க தொடங்கி விட்டேன். 25 தொகுதிகள் வெற்றி பெறும் அளவிற்கு பாஜக பலமாக இருக்க வேண்டும். மாற்றத்திற்கான பெரிய எழுச்சியை  தென்காசி மாநாட்டில் பார்க்க தொடங்கி விட்டோம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ் பி வேலுமணியை விமான நிலையத்தில் சந்தித்தது  மரியாதை நிமித்தமாக மட்டுமே. அரசியல் ரீதியாக எதுவும் கிடையாது.

ஏப்ரல் 14 ஆம் தேதி ஊழல் பட்டியல் வாட்ச் பில் அனைத்தும் கொடுக்கப்படும். வானதி சீனிவாசன் உட்பட அனைவரும் இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். பாஜக தனித்து போட்டி என பொதுவெளியில் நான் எங்கும் கூறவில்லை.

கட்சி வளர்வதற்கு என்று எனக்கு தனி இலக்கு இருக்கிறது. அது கூட்டணியிலா இல்லை தனித்தா என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். இன்றைய தேதியில் சீட் ஒதுக்கீடு தொடர்பாக பேச வேண்டிய தேவை இல்லை. ஒருங்கிணைந்த அதிமுக, ஒருங்கிணைப்பு இல்லாத அதிமுக என சொல்வதற்கான உரிமை எனக்கு கிடையாது. கட்சியுடன் தான் கூட்டணி தவிர  தனி மனிதருடன் கூட்டணி கிடையாது.

ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் பண்பு இருக்கும். கிளீன் பாலிடிக்ஸ் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி மக்கள் பிரதிநிதியாக வருவதற்கு எந்த பயனும் இல்லை.  பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பல இளைஞர்கள் பாஜகவில் சேர விரும்புகிறார்கள். ஐந்தாண்டுகள் மக்கள் பணியை சிறப்பாக முடித்துவிட்டு பாஜகவில் சேருங்கள் என அறிவுறுத்துகிறேன். ஏனென்றால் பாஜகவில் சேர்ந்து விட்டால் உடனடியாக அவர்கள் பகுதிக்கு நிதியை நிறுத்தி விடுவார்கள்.” என அண்ணாமலை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு உள்ளது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை..

16 சதவீதத்திற்கும் மேலே வட்டி கொடுப்பதாக ஆருத்ரா போன்ற நிறுவனங்கள் மோசடி செய்த ஏகப்பட்ட மக்கள் பணம் மீட்கப்பட்டது ஐந்து சதவீதத்திற்கும் குறைவானதுதான்.  முதலீடு செய்யும் முதல் 2000 நபர்கள் இந்த பணத்தை எடுத்துச் சென்று விடுவார்கள். ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்களால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

இதில் பாஜக நிர்வாகி மட்டும் அல்ல யாராக இருந்தாலும் தவறான முறையில் முதலீடு செய்து ஒரு ரூபாய் சென்று இருந்தாலும் கூட  நடவடிக்கை எடுக்க்ப்பட வேண்டும். ஆருத்ரா மட்டுமில்லாமல் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் எட்டாயிரம் கோடிக்கு மேலே மோசடி செய்திருக்கிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முதலும் முடிவுமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

Gayathri Venkatesan

அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!

Gayathri Venkatesan

இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று!

EZHILARASAN D