அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள புஷ்பா2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தினர்.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அத்துடன் புஷ்பா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Gangama thalli jathara… Kollu pottella kothara 🪓
Katthiki netthuti puthara… 🔪
Devatha kaina thappadhu yera… Idhi lokam talarathara 🌏#Pushpa2TheRule ❤️🔥🔥💥#HappyBirthdayAlluArjun
– https://t.co/eNEiADQGP0@alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP pic.twitter.com/SFaQlDVLmi
— Mythri Movie Makers (@MythriOfficial) April 7, 2023
அந்த போஸ்டரில், அல்லு அர்ஜூன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார் . ஆண், பெண் என்று அவதாரம் எடுத்த கடவுளின் கெட்டப் என பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.







