அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி – மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

“மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்யும் மத்திய அரசுக்கு எனது கண்டனம்” என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை…

“மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்யும் மத்திய அரசுக்கு எனது கண்டனம்” என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்யும் மத்திய அரசுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சாவர்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.