குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வந்தது.  இதன் காரணமாக குற்றால…

குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வந்தது.  இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.  அந்த வகையில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதில் குறிப்பாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.

அதன்படி, அடவிநயினார் அணைப் பகுதியில் 22 மி.மீ., தென்காசியில் 9, கருப்பாநதி அணையில் 5, குண்டாறு அணையில் 4 , கடனாநதி அணை, செங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.  இந்த நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.