“ரஷீத்தை எம்.பி.யாக பதவியேற்க அனுமதியுங்கள்” – குலாம் நபி ஆசாத் வலியுறுத்தல்!

டிபிஏபி கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்,  பொறியாளர் ரஷீத்தை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் ( டிபிஏபி) தலைவரும்,  ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான…

டிபிஏபி கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்,  பொறியாளர் ரஷீத்தை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் ( டிபிஏபி) தலைவரும்,  ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்,  பொறியாளர் ரஷீத்தை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை புதன்கிழமை வலியுறுத்தினார்.

பயங்கரவாத நிதியுதவி வழக்கில் NIA-ல் குற்றம் சாட்டப்பட்டு 2019 முதல் சிறையில் இருக்கும் ரஷீத்,  சமீபத்திய தேர்தலில் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை தோற்கடித்தார்.

இந்நிலையில்,  ஆசாத் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் பொறியாளர் ரஷீத் அமோகமான மக்கள் ஆதரவுடன் தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளதால்,  அரசு ஆணையை ஒப்புக்கொண்டு அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்.

காஷ்மீரின் 4 மாவட்டங்களில் உள்ள அவரது தொகுதியினர் தாமதமின்றி பிரதிநிதித்துவத்திற்கு தகுதியானவர்கள்.  அவரது வேட்புமனுவை சட்டம் அனுமதித்திருந்தால்,  பாராளுமன்ற நடவடிக்கைகளில் அவர் முழுமையாக பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

ரஷீத் சிறையில் இருப்பதால்,  அவரது குடும்பத்தினரும்,  ஆதரவாளர்களும் கடந்த 5 ஆண்டுகளாக வேதனையில் உள்ளனர்.  லோக்சபா தேர்தலில் தந்தைக்காக பிரசாரம் செய்து வெற்றியை உறுதி செய்த அவரது இரு மகன்களையும் பாராட்ட வேண்டும். அரசியல் சாசனத்தின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் அவருக்கு அதிக அளவில் வாக்களித்தனர்.  எனவே, இந்த காரணிகளை கருத்தில் கொண்டு, அரசு அவரை விடுதலை செய்து, பதவிப் பிரமாணம் செய்ய அனுமதிக்க வேண்டும்,” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.