முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் -கே. பாலகிருஷ்ணன்

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும் – பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் நாமக்கல்லில் திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேச்சு.

நாமக்கலில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன், மாநில துணைத் தலைவர் தேன்மொழி ஆகியோரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னின்று நடத்தி வைத்தார். அதன் பிறகு மணமக்களை வாழ்த்தி பேசிய பாலகிருஷ்ணன், காதல் குறித்த பல்வேறு விஷியங்களைப் பகிர்ந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் அவர் பேசியதாவது, காதல் என்பது சாதி,மதங்களைக் கடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. இந்து மதத்தை சேர்ந்தவரான சுந்தரய்யா கிறிஸ்தவ பெண்ணான லீலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருக்கும் சூழ்நிலைப் போல் அப்போது இல்லை, பல்வேறு போராட்டக்களுக்கு இடையே அந்த திருமணம் நடைபெற்றது. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, ஆதலால் இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.

என்னுடைய குடும்பத்தில் அனைவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். காலநேரம் பார்த்து, பல்வேறு சடங்குகள் செய்து நடைபெறும் திருமணங்கள் கூட ஆறு மாதங்களில் நீதிமன்ற வாசலில் சென்று நிற்கிறது. சீர்திருத்த முறையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன், தேன்மொழி தம்பதியினர் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்தி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram