‘தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்’ – வி.கே.சசிகலா அறிக்கை

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூரில் முருகப் பெருமானையும், விஜயாபதியில் விஸ்வாமித்திரரையும், இலஞ்சியில் இலஞ்சிகுமாரரையும் வழிபாடு செய்ய தென் மாவட்டங்களுக்கு…

தொண்டர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூரில் முருகப் பெருமானையும், விஜயாபதியில் விஸ்வாமித்திரரையும், இலஞ்சியில் இலஞ்சிகுமாரரையும் வழிபாடு செய்ய தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டது, மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் மேற்கொண்டது ஆன்மிக பயணமாக இருந்தாலும், தென் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு, தம்மை திக்கு முக்காட வைத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய தென் மாவட்டங்களில் சென்ற அனைத்து இடங்களிலும் தொண்டர்களும், பொதுமக்களும் வழி நெடுகிலும் அளித்த சிறப்பான வரவேற்பால் மனம் நெகிழ்ந்து போனதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: மருத்துவர்கள் பரிந்துரைத்தும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் – ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம்.

தொண்டர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் காண முடிந்ததாக கூறியுள்ள சசிகலா, தொண்டர்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாத வகையில் தனது எஞ்சிய வாழ்நாட்களை அர்ப்பணித்து நிச்சயம் நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவை காப்போம் என்றும், கவலை வேண்டாம் என்றும் தெரிவித்துள்ள சசிகலா, தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படுவது உறுதி என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.