“ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் “ – போர் எதிர்ப்பு திரைப்படங்கள் வரிசையில், ரத்தத்தில் எழுதிய ஒரு கவிதை

நெட்ஃபிளிக்ஸில் ஜெர்மன் மொழியில் வெளியாகிய “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் “ .திரைப்படம்: ஒரு சிறப்புப் பார்வை. போரையும் அதில் நிகழும் சண்டையையும் மிகைப்படுத்தாமல், அதன் துயரத்தையும் திகிலையும் உண்மைக்கு மிக…

நெட்ஃபிளிக்ஸில் ஜெர்மன் மொழியில் வெளியாகிய “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் “ .திரைப்படம்: ஒரு சிறப்புப் பார்வை.

போரையும் அதில் நிகழும் சண்டையையும் மிகைப்படுத்தாமல், அதன் துயரத்தையும் திகிலையும் உண்மைக்கு மிக அருகில் சித்தரிக்கும் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. சாம் மென்டிஸின் இயக்கத்தில் வெளியான “1917” மிகச் சிறந்த  உதாரணம்.

அந்த வரிசையில், கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் ஜெர்மன் மொழி திரைப்படமான வெளியாகிய “ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் “ படம் போரின் கொடூரத்தை மிகவு,ம் கவித்துவமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காட்ச்சிபடுத்தியிருக்கிறது.

1929இல் எரிக் மரியா ரீமார்க்கின் கிளாசிக் போர் எதிர்ப்பு நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் இறுதி 18 மாதங்களில் ஒரு இளம் ஜெர்மன் சிப்பாய் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

1917 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பால் பாமர் தனது மூன்று பள்ளி நண்பர்களுடன் தேசபக்தி மற்றும் பெருமை நிறைந்த கனவுகளுடன், ராணுவத்தில் சேருகின்றனர்.

அந்த கனவுகள் வெஸ்டர்ன் ஃப்ரண்ட்க்கு வந்த சில மணி நேரங்களிலேயே சிதைந்துவிடுகிறது. கண் எதிரே மில்லியன் கணக்கானவர்கள் மடிகின்றனர். இந்நிலையில் போர்க்களத்தில் மூத்த போர் வீரரான “Kat” என்கின்ற Katczinsky ஐ பால் சந்திக்கிறான்.

கேட் ஒரு தந்தையைப் போல, அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாறுகிறார். கேட் மற்றும் பால் இடையேயான உறவு, மனிதநேயம், நகைச்சுவை மற்றும் தோழமை உள்ளிட்ட உணர்வுகள் நிறைந்த காட்சிகள் படத்தின் ஒட்டு மொத்த கதையையும் தூக்கி நிறுத்துகிறது. திமிர்பிடித்த, செல்லம் படைத்த படைத் தளபதிகள் இலட்சக்கணக்கான வீரர்களை தங்கள் அரசியல் வீம்புக்காகப் போர்க்களம் அனுப்பி பலியாக்குவது துயரத்தின் உச்சம்.

இயக்குநரும் இணை எழுத்தாளருமான எட்வர்ட் பெர்கர் போரில் நடக்கும் சண்டையை  உண்மைக்கு மிக அருகில் பார்வையாக்கு தன் காட்சி அமைப்பின் மூலம் கடத்தியுள்ளார்.

படத்தில் உள்ள ஒவ்வொரு நுணுக்கமும் வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பாக உடல்கள் சிதறடிக்கப்படுவது, சேறு படிந்த வாகனங்கள், ஒருவருக்கொருவர் சண்டையிடுகையில் நடக்கும் தாக்குதல்கள் அதனால் ஏற்படும் காயக்கள் என பல நுணுக்கமான காட்சிகள் பார்ப்போரை முழி பிதுங்க செய்கிறது.

அனைத்து வகையிலும் பார்வையாளர்களைக் கட்டி இழுக்கும் இப்படத்தின் முதல் 15 நிமிடங்களில் பார்வையாளனின் ஒட்டுமொத்த புலன்களையும் கட்டி போடுகிறது. சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் பிரிவில் இருக்கும் இப்படம், வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.