நடிகர் ரஜினியின் எவர்க்ரீன் ஆக்ஷன் படமான மூன்று முகம் டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கப்பட்டு நாளை மதியம் 3.45 மணிக்கு கமலா திரையரங்கில் ஒளிபரப்பப்படுகிறது.
ரஜினியை ‘முன்னணி ஹீரோ’ என்கிற அந்தஸ்திற்கு உயர்த்திய முக்கியமான படங்களுள் ஒன்று ‘மூன்று முகம்’. அலெக்ஸ் பாண்டியன் என்கிற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில், கம்பீரமும் ஸ்டைலும் கலந்து ரஜினி நடித்த இந்த அட்டகாசமான கேரக்டரை எவராலும் மறக்க முடியாது. இதுதான் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம்.
இயக்குநர் ஏ.ஜெகந்நாதனும் ரஜினியும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுவே. 1982-ல் வெளியான இந்தத் திரைப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றதோடு, இந்தியிலும் ரஜினியை வைத்து ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ராதிகா, தேங்காய் ஸ்ரீனிவாசன், செந்தாமரை திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் தமிழலகன் தயாரிக்க, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.
இது ஒரு கமர்ஷியல் படம் என்றாலும் இரண்டு முக்கியமான காரணங்களுக்காக இதை நினைவுகூரலாம். ஒன்று, ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்கிற கதாபாத்திரம். வெளிவந்த காலத்தில் திரையரங்கம் ஆரவாரத்தில் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்னொன்று படத்தின் இயக்குனர். மூன்று ரஜினிகள் கதாபாத்திரம் இருந்தாலும் துளி குழப்பம் கூட வராத அளவுக்கு நேர்த்தியாகவும் எளிமையாகவும் திரைக்கதையை எழுதியிருப்பார். இதைப் போலவே மூன்று கேரக்டர்களுக்கும் வெவ்வேறு உடல்மொழியைப் பயன்படுத்தி, நடிப்பில் கணிசமான வித்தியாசம் காட்டியிருப்பார் ரஜினி.
https://twitter.com/sathyamovies/status/1687741945224036352
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. ஜெயிலருக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுவதால், இந்த வாரம் எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை. ஆனால் இந்த சமயத்தில் ரஜினியின் எவர்க்ரீன் ஆக்ஷன் படமான மூன்று முகம் டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கப்பட்டு நாளை மதியம் 3.45 மணிக்கு கமலா திரையரங்கில் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.







