இணையத்தை கலக்கி வரும் AK புகைப்படங்கள்; அஜித்தின் சுற்றுப்பயணம் முடிந்த பின் தொடங்குமா AK62?

அஜித் குமார் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வரும் நிலையில், AK62 படம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார்…

அஜித் குமார் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வரும் நிலையில், AK62 படம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் துணிவு திரைப்படம்  வெளியான சில நாட்களிலேயே வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார். அஜித் தனது படங்கள் ரிலீஸ் ஆனதும் சுற்றுலா செல்வது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இந்த முறை போர்ச்சுகல்லுக்கு சென்றுள்ளார். துணிவு படம் வெளியாவதற்கு முன்பு பைக்கில் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பின்னர் துணிவு படப்பிடிப்பிலிருந்தபோது தாய்லாந்திலும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்நிலையில் தற்போது, அஜித்குமார் போர்ச்சுகலின் பிரபலமான கடற்கரையான ப்ரியா  டமாரிஸில் இருப்பது போன்ற புகைப்படத்தை அஜித் குமாரின்  மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரின் அந்த பதிவில், அஜித்தை “மை சன்ஷைன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஷாலினி அஜித்தின் விமான நிலைய படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இந்த பதிவே தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அஜித் இந்த பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்ததும்,  AK62 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே, அஜித் நடிக்கும் 62வது புதிய படத்தின் ஓடிடி உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், திடீரென இந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் AK62 உருவாக உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக, விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பயோவிலிருந்து #AK62 ஐ நீக்கியிருப்பது, அஜித் 62வது படம் குறித்து  அஜித் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, எச் வினோத் இயக்கி அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பக்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து ஜனவரி 11 ஆம் தேதி வெளியான துணிவு இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.