நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் குமார் வீட்டில் வெடிகுண்டு…

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் குமார் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து ஈஞ்சம்பாக்கத்திலுள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதே போன்று அவர் முக்கிய பிரபலங்கள் வீடுகளில் மிரட்டல் விடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.