இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்று செயல்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் பணித்துள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார். துணை ஆணையராக ஆர்.கே.குப்தா பணியாற்றி வந்த நிலையில், தற்போது அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் பாது, கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
குஜராத்தில் ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக இரண்டு முறை சிறந்த ஆட்சியர் விருது பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இருந்த காலத்தில் இவர் இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








