“தமிழ்நாட்டில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என முன்னாள் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் இன்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நடத்தப்பட்ட
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்
நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என கூறினார். இதனால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அருகில் இருந்த கட்சிக்காரர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே மீண்டும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மாற்றி சொல்லி விட்டேன் என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் என்றும் அவர் கூறினார்.







