விஜய் சேதுபதியுடன் இணையும் கதைக்காக காத்திருக்கிறேன் – சிவகார்த்திகேயன் பேட்டி!

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் , அதற்கேற்ற கதைக்காக காத்திருப்பதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி திரையில்…

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகவும் , அதற்கேற்ற கதைக்காக
காத்திருப்பதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி திரையில் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவீரன்
திரைப்பட நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மடோன்
அஸ்வின், தயாரிப்பாளர் அருண் விஷ்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேசிய நடிகை சரிதா, தனது முதல் படம் வெளியானது போல் தற்போது
உணர்வதாகவும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்றார்.

இதனையடுத்து இயக்குநர் மீது முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்னதை மட்டுமே
அனைவரும் செய்தோம் அதுவே படத்தின் வெற்றிக்கு காரணம் என மாவீரன் பட நாயகி
அதிதி ஷங்கர் தெரிவித்தார்.


தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில் மாவீரன் படம் வெற்றிகரமாக திரையில்
ஓடுவதாகவும் தற்போதே படத்திற்கு செலவு செய்த தொகையை வசூல் செய்துவிட்டதாகவும் இனி வரும் வசூல் அனைத்தும் லாபம் என்றார். சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலே இந்த திரைப்படம் தான் உலகம் முழுவதும் 2000-க்கும்
மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது என்றார்.

இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

அரசியல்ரீதியாகவும் சரியாக சொல்லப்பட்டிருப்பதால் தான் களத்தில்
இருந்து செயல்படும் திருமாவளவன் போன்றவர்களிடம் இருந்து பாராட்டு
கிடைத்தது.

மேலும் இந்த படத்தில் எனக்கு விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்த விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை உள்ளது; விரைவில் அது நடக்கும். மேலும் விஜய் சேதுபதிக்கும் எனக்கு போட்டி இல்லை என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கதைக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். காஷ்மீரில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும், அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அப்போது தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.