முக்கியச் செய்திகள் தமிழகம்

பாவம் விடுங்க சார்… அமைச்சர் துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை…

சட்டப்பேரவையில் அதிமுக பேரவை உறுப்பினர் அர்ச்சுணன் பேசிக்கொண்டிருந்தபோது அவரைக் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

கேள்வி நேரத்தில் அதிமுக பேரவை உறுப்பினர் அர்ச்சுணனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, மருதமலை சுவாமி திருக்கோயிலுக்கு கம்பிவட ஊர்தி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது, ஆனால் பொதுப்பணித்துறை எடுத்த மண் பரிசோதனையில் அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து மீண்டும் எம்.எல்.ஏ. அர்ச்சுணன் பேசும் போது, எடப்பாடி தொடங்கி ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி வரை அனைவரையும் பாராட்டி பேசினார். அப்போது பேச்சின் நடுவே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள். நிதிநிலை அறிக்கையின் போது பேசுங்கள்” என்றார். அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கீடு செய்து, “எல்லாரும் பேசும் போது தலைவர், துணைத் தலைவர் பற்றி பேசுனாங்க. இப்போ தான் ஒருத்தர் கொறடா (எஸ்.பி.வேலுமணி) பற்றி பேசுகிறார். பாவம் அவர விடுங்க சார்” என்று கூறியதைக் கேட்டு அவையிலுள்ள அனைவரும் குபீரென்று சிரித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்

EZHILARASAN D

வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்கள் தொலைந்தால் புதிதாக வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவு-வருவாய்த்துறை அமைச்சர்

Web Editor

ஸ்கேன் எடுக்கச் சென்ற 8 மாத கர்ப்பிணி உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya