மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 123 ஜோடிகளுக்கு முதல்வர், துணை முதல்வர் தலைமையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24ம் தேதி வரவுள்ளது. இதைமுன்னிட்டு கோவையில் 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் நடத்தி வைக்க முதல்வர், துணை முதல்வர் வருவதையொட்டி கோவை முழுவதும் விழாக்கோலம் பூண்டது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஜோடிகளுக்கு முதல்வர், துணை முதல்வர் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்தனர். அத்துடன் அவர்களுக்கு 73 வகை சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.