வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் 118வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ம.பொ.சிவஞானம் தமிழ் வளர வேண்டும் என்ற அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்தவர். அவர் இல்லையென்றால் சென்னை ஆந்திராவின் தலைநகராக மாறி இருக்கும். அம்மா உணவகம் இன்று பாழடைந்து உள்ளது.அம்மா மினி கிளினிக் திட்டத்தை நீக்கிவிட்டு நகர்ப்புற நல்வாழ்வு மையம் என தொடங்கியுள்ளனர்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மூடு விழா செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகின்றனர். இதற்கு மக்கள் பதில் அளிப்பார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தான் முடிவு எடுக்கும். வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. சமூக நீதி குறித்து பேச திமுகவிற்கு தகுதி இல்லை” என ஜெயக்குமார் தெரிவித்தார்.