ஜெயலலிதா கட்டி காத்த அதிமுக கட்சி இன்று வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என அ.ம.மு.க. கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
கும்பகோணம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி, ராஜபக்சே போல் செயல்படுகிறார் என்றும் விரைவில் ராஜபக்சேக்கு நடந்த நிலையை எடப்பாடி பழனிச்சாமிக்கு நிகழும் என்று என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மேலும், ஒருபுறம் ஓ பன்னீர் செல்வமும், மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி துரோகிகள் என்றும் அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட கழகம் இன்று இவர்கள் கையில் சிக்கி சீரழிவதாகவும் இதை தற்போது நாங்கள் வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கத் தான் முடியும். தமிழகத்திற்கு ஆளுநர் பதிவு என்பது ஆட்டுக்கு தாடியை போல் தேவையில்லாத ஒன்று என அண்ணா கூறியதை தான் நாங்களும் தெரிவிக்கிறோம். திராவிட கட்சிகளின் நிலைப்பாடும் அதுதான் என்று தெரிவித்தார்.
பொன்னையன் ஆடியோ குறித்து கேட்டதற்கு, இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வருகிறேன் என்றும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் உள்ளதையே இது காட்டுகிறது என்றும் அதிமுகவில் தற்போது அனைவரும் பண மூட்டைகளை வைத்துக் கொண்டிருப்பதாகவும், அதிமுகவில் உள்ளவர்கள் சகுனி கூட்டம் என்றும் அதிமுக கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
மதுரையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சரவையை கேட்காமல் தன்னிச்சையாக ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.








