மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தளுக்காக அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்கள் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி இதுவரை 170-க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே கூட்டணியை பலப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி, சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், 10-ம் தேதி நடைபெற உள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் வெற்றி வாய்ப்பு, கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.