அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு – எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வெளியான நிலையில், அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.   சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக…

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வெளியான நிலையில், அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

 

சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், உச்சநீதிமன்றத்தை நாடியபோது, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து பதில் வழங்கலாம் என தெரிவித்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி கோரிக்கை விடுத்துள்ளார். அதில், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறை முடிந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர். மேலும் பிற்பகல் 1.30 மணிக்கு முன் எண்ணிடும் நடைமுறை முடிந்தால் திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.