அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், அக்கட்சியில் முறைப்படி இணைந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 11…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், அக்கட்சியில் முறைப்படி இணைந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கமும் ஒருவர். மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக ஏற்படுத்திய 11 பேர்கொண்ட வழிகாட்டுதல் குழுவிலும், இவர் முக்கிய உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில், அவர் அதிமுகவிலிருந்து விலகி, திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உடனிருந்தனர். மாணிக்கம் பாஜகவில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.