அதிமுக பொன்விழா மாநாடு : கிடா வெட்டி பூஜை செய்த தொண்டர்கள்!

அதிமுக மாநாடு வெற்றி பெறவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என வலையங்குளம் கருப்புசாமி கோவிலில் அக்கட்சி நிர்வாகிகள் கிடா வெட்டி பூஜை செய்தனர். அதிமுக பொன்விழா ஆண்டு எழுச்சி மாநாடு மதுரை…

அதிமுக மாநாடு வெற்றி பெறவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என வலையங்குளம் கருப்புசாமி கோவிலில் அக்கட்சி நிர்வாகிகள் கிடா வெட்டி பூஜை செய்தனர்.

அதிமுக பொன்விழா ஆண்டு எழுச்சி மாநாடு மதுரை வலையங்குளம் பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் மாநாடு வெற்றி அடையவும்,  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக  வேண்டும் என்றும் கோவை மாவட்டம் அவினாசி தெற்கு ஒன்றிய கழகம் மற்றும் அம்மா பேரவை இளைஞர் அணி சார்பாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு எதிரே உள்ள வலையங்குளம் கருப்புசாமி கோயிலில் கிடாவெட்டி வீரவாள் மற்றும் செங்கோல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.