5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இளம் பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிக்க, ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வழக்கம். கொரோனா தொற்று பரவலால், ஜனவரி 23ல் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர், பொம்மைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து செயதியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 47 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுககு சொட்டு மருந்து செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து புகட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







