வேளாண் சட்டங்கள்: தமிழகத்தில் தடையை மீறி நடைபெற்ற பேரணி!

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ்., தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர்…

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ்., தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர். திருநெல்வேலி டவுன் ஆர்ச்சி முன்பாகத் தொடங்கிய இந்தப் பேரணி, மேல் ரதவீதி காந்தி சிலை முன்பாக நிறைவடைந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

கோவையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த விவசாயிகள், தேசியக்கொடியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவினாசி சாலையிலுள்ள கோயிலில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள், காய்கறிகள், வாழை மரங்கள், பழங்கள் மற்றும் மோட்டார் பம்பு செட்டுகளை கைகளில் ஏந்திய படி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply