#Vadivelu பிறந்தநாள் : புதிய போஸ்டரை வெளியிட்ட ‘மாரீசன்’ படக்குழு!

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி, புதிய போஸ்டரை வெளியிட்டு ‘மாரீசன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு, கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கிய…

After 'Mamannan', Fahadh Faasil and Vadivelu's movie Mareesan;

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி, புதிய போஸ்டரை வெளியிட்டு ‘மாரீசன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த நடிகர் வடிவேலு, கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து சரியான கம்பேக் கொடுத்தார். இந்த திரைப்படத்தில் வடிவேலு மற்றும் நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு இடையிலான காட்சிகள் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது.

இந்த கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளனர்.சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘மாரீசன்’. யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமை – #SitaramYechury-ன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தற்போது ‘மாரீசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை ஒட்டி, புதிய போஸ்டரை வெளியிட்டு ‘மாரீசன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.