“திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர்” – #SitaramYechury மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர் சீதாராம் யெச்சூரி என பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கற் குறிப்பில் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.…

PM Modi condoles the death of "a man who made his mark as an able parliamentarian" - #SitaramYechury!

திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர் சீதாராம் யெச்சூரி என பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கற் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. அவரின் மறைவிற்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீதாராம் யெச்சூரியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

“சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது; அவர் இடதுசாரி தலைவர்களின் முன்னணி வெளிச்சமாக இருந்தவர்; திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர்; அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவர்மீது பற்றுக் கொண்டவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.