முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கன் தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் உயிரிழப்பு

ஆப்கன் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா படைகள் பத்திரமாக மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க படைகள் வெளியேற இந்த மாத இறுதுக்குள் ஆப்கனை விட்டு வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு கெடு வைத்தது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க படைகள் மக்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் மேற்கொண்டால் அவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில், நேற்று மாலை காபூல் விமான நிலையம் அருகே நேற்று அடுத்தடுத்து 2 தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்,  அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 60 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என  தெரிவித்தார்.  இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ் ஆராய்ச்சிக்காக ரூ.134 நிதி ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு

G SaravanaKumar

இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?

Arivazhagan Chinnasamy

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – அரசுக்கு ராகுல் கோரிக்கை

Mohan Dass