முக்கியச் செய்திகள் தமிழகம்

“எந்த கட்சி என்றே தெரியாது”- ஓபிஎஸ் ஆதரவாளர் குறித்து ஜெயக்குமார் காட்டம்

தேர்தல் ஆணையம் இன்று நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பாக கலந்துகொண்டார் என்று தங்களுக்கு தெரியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறினார்.

அதிமுகவிற்கு சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில்  பல்வேறு விவகாரங்களில் தங்கள் பலத்தை நிரூபிக்க முன்னாள் முதலமைச்சர்களான ஓபிஎஸ், இபிஎஸ் அணியினிரிடையே போட்டி நிலவி வரும் நிலையில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் இது எதிரொலித்தது

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டம்  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டனர். அதே நேரம் தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதிமுக சார்பில் இரண்டு அணிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முன்கூட்டியே கூட்டத்திற்கு வந்திருந்த கோவை செல்வராஜ் அதிமுக பெயர் பலகை முன்பு அமர்ந்திருந்தார். பின்னர் வந்த அமைச்சர் ஜெயக்குமார் அந்த பெயர் பலகையை தமது பக்கம் இழுத்து வைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலானது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின்  நடைபெற்ற முதல் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதால் இரண்டு அணிகளில் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட போகிறது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் தேர்தல் ஆணைய கூட்டத்தில் உற்றுநோக்கப்பட்டன.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் கலந்துகொண்டது தானும் பொள்ளாச்சி ஜெயராமனும்தான் எனக் கூறினார். கோவை செல்வராஜ் எந்தக் கட்சி சார்பில் கலந்துகொண்டார் என தங்களுக்கு தெரியாது எனக்கூறிய ஜெயக்குமார், இந்த கேள்வியை தேர்தல் ஆணையத்திடம்தான் எழுப்ப வேண்டும் என்றார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுகவில் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் வரைதான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அந்த அடிப்படையில் தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான் எனக் கூறிய கோவை செல்வராஜ்,  ஓபிஎஸ் தன்னிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அதிமுகவின் பிரதிநிதியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறினார். அதிமுக பெயர் பலகையை தனது பக்கம் ஜெயக்குமார் இழுத்து வைத்ததற்கு கண்டனம் தெரிவித்த கோவை செல்வராஜ், முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர் இது போன்ற தரமற்ற செயலில் ஈடுபடுவது சரியல்ல எனக் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“என் வெற்றியை விட மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வெற்றி முக்கியம்” – உதயநிதி

Gayathri Venkatesan

வடமாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் – ராமதாஸ் யோசனை

G SaravanaKumar

தரமான சம்பவத்தை நிகழ்த்தி விட்டு விடைபெற காத்திருக்கும் தென் மேற்கு பருவமழை..!

G SaravanaKumar