விஸ்வநாதன் ஆனந்துக்கு ஒரே கேள்வியில் செக் வைத்த எட்டு வயது சிறுமி

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார்.   மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று…

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார்.

 

மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் கேள்வி நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பானது
கிடைக்கும்.

 

அந்த வகையில் நேற்று ஐந்து முறை உலக சாம்பியன் ஆன விஸ்வநாதன் ஆனந்திடம் எட்டு வயது ஆன இரட்டை சிறுமிகள் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர். தற்பொழுது அந்த கேள்வி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

கேள்வி நேர தருணத்தின் போது, இரட்டை சிறுமிகளில் ஒருவர் காயின்களை எப்படி மறுபடியும் reset செய்வது என்று கேள்வி கேட்டு அதற்கு ஆனந்த் பதிலளிக்க
தொடங்கிய போது, அந்த சிறுமி காயின்களை வைத்து எதிரணி வீரரை திசை திருப்புவது எப்படி என்று கேள்வி எழுப்பினார். ஆனந்த் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் “i
have no idea” என்று கூறி மகிழ்ச்சி சிரிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் இதனை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், இன்றைய தினத்திற்கான கேள்வி என்றும் பதிவிட்டுள்ளார். உலக சாம்பியனையே தங்களுடைய
கேள்விகளால் திணற வைத்த இந்த இரட்டை சிறுமிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.