சேலம் | அதிமுக சார்பில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!

சேலம் மாவட்டம் SSRK முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தமிழர்களின் பண்பாட்டு பண்டிகைகளுள் ஒன்றாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் உற்சாகமாக தங்களது குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் மட்டுமல்லாமல் அந்திரா மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் இவ்விழாவை  மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள SSRK ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது ஓமலூர் மேற்கு ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் நடத்தப்பட்டது.

அனைத்து முதியவர்களும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியுடன் புத்தாடை உடுத்தி மகிழ்ந்தனர். பின்னர் மாவிலை, மஞ்சல், கரும்பு கட்டி ஆகியவற்றை வைத்து முதியோர் இல்லத்து பாட்டிகள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். அதனை தொடர்ந்து, பொங்கல் பானைகளை வைத்து படையலிட்டு கதிரவனை வழிபட்டனர். அதன் பிறகு அங்குள்ள அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. முதியவர்களுடன் அதிமுக நிர்வாகிகள்  இணைந்து பொங்கலோ பொங்கல் என முழங்கி பொங்கல் உண்டு மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.