அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியாவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி கைது!

அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளரும் நடிகையுமான விந்தியாவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் கைது செய்யப்பட்டார்.  அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியாவை மிக ஆபாசமாக விமர்சித்து திமுக நிர்வாகியும்…

அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளரும் நடிகையுமான விந்தியாவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் கைது செய்யப்பட்டார். 

அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியாவை மிக ஆபாசமாக விமர்சித்து திமுக நிர்வாகியும் பேச்சாளருமான குடியாத்தம் குமரன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு யூடியூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும்,வழக்கறிஞருமான இன்பதுரை, விந்தியா சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இப்புகார் மனுவை பதிவு செய்து கொண்ட தேசிய மகளிர் ஆணையம்  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உடனடியாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து விந்தியாவிடம் புகார் மனுவை பெற்ற சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார்  நேற்று ஆபாசமாக பேசுதல், பெண்ணை அவமரியாதையாக பேசுதல்,  தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் குமரனை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.