சக்திவாய்ந்த சூரியப் புயல் தரவுகளை பதிவு செய்தது ஆதித்யா எல்- 1: இஸ்ரோ விளக்கம்!

சூரியனின் ‘ஏஆர்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் தேதி சூரியனின்…

சூரியனின் ‘ஏஆர்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் தேதி சூரியனின் ஏஆர் 3664 என்ற குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து வெளிப்பட்ட ‘எக்ஸ் ரக கதிர்கள்’ பூமியில் மிகப்பெரிய அளவில் தாக்கியது. இது குறித்து இஸ்ரோ செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

“கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சூரியனில் ஏற்பட்ட மிக வலிமையான புவிகாந்தப் புயலாக இது கருதப்படுகிறது. 1859-ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த சூரியப் புயலைத், தொடர்ந்து காந்தக் கதிர்வீச்சை குறுகிய நேரத்தில் அதிகளவில் வெளியிடும் சூரியனின் பகுதிகள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

பல்வேறு எக்ஸ் ரக கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து அதிகளவில் வெளியிடப்படும் (சிஎம்இ) கதிர்களும் கடந்த சில நாட்களாக பூமியைத் தாக்கியது. இதனால் துருவப் பகுதிகளில் பயணிக்கும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற சூரியனின் சக்திவாய்ந்த கதிர்கள் பூமியை தாக்கும் நிகழ்வுகள் வரும் நாட்களில் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!

இந்தப் புயலின் தீவிரம் அதிகம் உணரப்பட்ட மே 11-ஆம் தேதியில் பூமியின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ‘அயன மண்டலம்’ முழுமையான வளர்ச்சியை எட்டாததால் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. இஸ்ரோவின் அனைத்து கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் அமைப்புகளை பயன்படுத்தி இந்தப் புயலை கண்காணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் ஆதித்யா எல்-1 மற்றும் சந்திராயான்-2 ஆகிய இரு விண்கலங்களும் தொடர் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்தப் புயல் குறித்த தரவுகளை வழங்கின. மேலும், அதிவேக சூரியக்காற்று, அதிக வெப்பமுடைய பிளாஸ்மா சூரியக் காற்று தற்போது வரை அப்பகுதியில் வீசி வருவதாக ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து தகவல் அனுப்பியுள்ளது”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.