ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சினிமா தொழிலாளர்கள் கடிதம்!

ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அகில இந்திய திரையுலக தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்…

ஆதிபுருஷ் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அகில இந்திய திரையுலக தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூ16 ஆம் தேதி வெளியானது. இதில் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரானபிரபாஸ் ராமராக நடித்துள்ளார். ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். படம் வெளியான 3 நாட்களில் ரூ. 340 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய திரையுலக தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆதிபுருஷ் திரைப்படம் இந்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. ராமர் நாட்டில் உள்ள அனைவருக்கு பொதுவானவர். படத்தின் காட்சிகளும் வசனங்களும் ராமர் மற்றும் ஹனுமரை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இயக்குநர் ஓம்ராவத் வசனம் எழுதிய மனோஜ் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.