அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி எதிரொலி – எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…

Adani shares fall echo - LIC loses Rs 12,000 crore in one day!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் முறைகேடாக பெறப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.25 ஆயிரம் கோடி நிதியை அதானி குழுமம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் உள்பட 7 பேரின் மீதும் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.

இந்நிலையில், அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசிக்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்துள்ளது. தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ.2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்தது. அதன் குழுவில் உள்ள எல்ஐசி பங்குகள் ரூ.12,000 கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.