அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. அதுமட்டுமல்லாமல் அதானியின் சொத்து மதிப்பும் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் 20,000 கோடி மதிப்புடைய பங்கு விற்பனை ரத்து (FPO) செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்ப அளிக்கப்படும் என்று அதானி குழும தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விவகாரம் வெளியானது முதலே அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த விவகாரம் வெளியான முதல் இரண்டு வர்த்தக நாட்களில் 20 சதவீதம் வரை சரிவை கண்டன.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்கு 15 சதவீதம் வரை சரிவை கண்டது. அதுமட்டுமல்லாமல் அதானி பவர், அதானி கிரின் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் அகிய பங்குகளும் சரிவை சந்தித்தன. டவ் ஜோன்ஸ் சஸ்டைபினிலிட்டி குறியீட்டிலிருந்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அந்த குறியீட்டிலிருந்து நீக்கப்பட்ட்டுள்ளது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.