தி லெஜண்ட் படக்குழுவினருக்கு நடிகை தமன்னா வாழ்த்து!

தி லெஜண்ட் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகை தமன்னா படக்குழுவினருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி…

தி லெஜண்ட் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நடிகை தமன்னா படக்குழுவினருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சகமர்சியல் மாஸ் படமாக உருவாகியுள்ளது. பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். சின்னத் திரைக் கலைவாணர் விவேக் கடைசியாக இப்படத்தில் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் இத்திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார். கேரளாவில் தி லெஜண்ட் படத்தின் வெளியீட்டு உரிமையை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் வாங்கியுள்ளார். ஹிந்தி வெளியீட்டு உரிமையை கணேஸ் பிலிம்ஸ் விநியோகஸ்தர் நம்பிராஜன் வாங்கியுள்ளார்.

 

https://twitter.com/tamannaahspeaks/status/1549279744369238016

தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை தமன்னா படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், நானும், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் சாரும் இணைந்து ஏராளமான விளம்பரங்கள் நடித்துள்ளோம். அப்போதிருந்து அவரை எனக்குத் தெரியும். தற்போது அவர் தி லெஜண்ட் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் என்னுடைய திரைப் பயணத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். பொதுமக்கள் அனைவரும் இப்படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.