தனது நீண்டநாள் காதலரான ஜாகீர் இக்பாலை கரம் பிடித்தார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
பாலிவுட்டில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. சல்மான் கானுக்கு ஜோடியாக 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பெரிய அளவில் அறிமுகமானார் சோனாக்ஷி சின்ஹா. தபாங் படத்தின் மற்ற இரண்டு பாகங்களிலும் சல்மான் கானுடன் நடித்திருந்தார் சோனாஷி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரமாண்டியிலும் நடித்திருந்தார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழில் லிங்கா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது காதலர் ஜாகீர் இக்பாலை கரம்பிடித்துள்ளார் சோனாக்ஷி. கடந்த ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தநிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.







