ஜனநாயக தேசிய மகளிர் குழுவின் மாநாட்டையொட்டி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் செய்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் துணை அதிபர் கமலா ஹாரிஸை நடிகை பிரியங்கா சோப்ரா நேர்காணல் செய்தார். ஜனநாயக தேசிய மகளிர் குழுவின் மாநாட்டையொட்டி நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பாலின சமத்துவம், துப்பாக்கி கலாச்சாரம் உள்ளிட்டவை தொடர்பான பல கேள்விகளுக்கு கமலா ஹாரிஸ் பதிலளித்தார்.
அப்போது, தமது 22 ஆண்டு கால பணியில், முதன்முறையாக ஆண் தொகுப்பாளருக்கு இணையாக தமக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்தார். வாஷிங்டன் வருகை தொடர்பான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டது பற்றியும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.
இதனிடையே, பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் மகள் மால்டி நியூயார்க்கில் நேரத்தை செலவிடுவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில், அப்பா மகள் சாகசங்கள் என பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்








