முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

பிரபல நடிகை திடீர் திருமணம்: டிவி நடிகரை மணந்தார்

பிரபல நடிகை மிருதுளா விஜய் திருமணம் கேரளாவில் இன்று நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள் ளார். மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவருக்கும் மலையாள டிவி தொடர் நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. இரண்டு பேரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்றாலும், இது காதல் திருமணம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இவர்கள் திருமணத்துக்கு ரசிகர்களும் திரையுலகினரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசு

Gayathri Venkatesan

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

Gayathri Venkatesan

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி

Gayathri Venkatesan