மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நடிகை கீர்த்தி சுரேஷ்!

மாமன்னன் படத்தின் வெற்றியின் காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகை மேனகாவின் மகள் என்ற அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இது என்ன…

மாமன்னன் படத்தின் வெற்றியின் காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழம்பெரும் நடிகை மேனகாவின் மகள் என்ற அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய், சூர்யா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் நடித்த ரஜினி முருகன் திரைப்படம், தொடரி, ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை கவர்ந்தார். மேலும், அட்லி தயாரிப்பில் ஹிந்தி ரீமேக்கான ‘தெறி’ படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.

கமர்ஷியல் படங்களுக்கு பிறகு நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காகிதம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பிறகு தெலுங்கு சினிமாவை கலக்கிவந்த கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தின் வெற்றி காரணமாக சுரேஷ் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை ரூ.2 கோடி வாங்கியவர் இப்போது ரூ.3 கோடி கேட்பதாக கூறுகின்றனர். இதனிடையே கீர்த்தி சுரேஷ் தற்போது கண்ணிவெடி என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.