முக்கியச் செய்திகள் சினிமா

நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் ஷாகா லகா பூம் பூம், கியுங்கி சாஸ் பி கபி பஹு தி மற்றும் சன் பாரி டிவி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரையுலக  வாழ்க்கையைத் தொடங்கிய ஹன்சிகா மோத்வானி தெலுங்கு படமான தேசமுதுரு மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒருகல் ஒரு கண்ணாடி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில இந்தி படங்களிலும் நடித்தார். 2008ல் கன்னடத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது அதிக அளவில் நடித்து வருகிறார். ஹிருத்திக் ரோஷனின் வெற்றிப் படமான கோயி மில் கயாவிலும் ஹன்சிகா நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மணமகன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக நடிகையிடமிருந்தோ அல்லது அவரது உறவினர்களிடமிருந்தோ அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கியக் கோரிக்கைகள்

Web Editor

‘EPF; மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை’ – மத்திய இணை அமைச்சர்

Arivazhagan Chinnasamy

தாய் நாட்டிற்கு பெருமைச் சேர்த்த மற்றொரு இந்தியப் பெண் வம்சாவளி!

Gayathri Venkatesan