மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மலைக்கிராமமான அரசம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாத்தா கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது.
மதுரை பாலமேடு அருகே ஸ்ரீ சாத்தா மலைக்கோயிலில் மழை பொழியவும், உலக மக்கள் நலமுடன் வாழ்வும் வேண்டி நடைபெற்ற அசைவ உணவு படையல்; திருவிழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த 2000 மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து அசைவ விருந்தில் பக்கேற்றனர்.
இதில் உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், கோழி, சேவல் ஆடுகளைப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கி சாமிக்குப் படையலிட்டு வழிபாடு செய்தனர்.
அதன் பின்னர் 2000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவை விருந்தளித்தனர். இவ்விழாவில் மதுரை, திண்டுக்கல், மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீசாத்தா சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.







