விவசாய நிலம் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மூலதன ஆதாய வரியில் 25 சதவீதத்தை செலுத்தும் பட்சத்தில் நடிகை கவுதமியின் வங்கி கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் என வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கோட்டையூரில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு நடிகை கவுதமி 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், அந்த நிலத்தின் மூலம், கடந்த ஆண்டு 11.17 கோடி ரூபாய் என வருவாய் வந்துள்ளது என அவர் கணக்கு காட்டியுள்ளதாக டில்லி தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி கணக்கின் முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை கவுதமி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, வழக்கு நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.